Wednesday, June 29, 2005

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைச்சுடுவீங்களோ?

இந்தியாவுல இந்த மக்களவைல தான் இடதுசாரிகளுக்கு 61 பேர் அபூர்வமா கிடைச்சிருக்கு.. ஆனா இப்போ ஆளும் கூட்டணியோட இருக்கற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போறாங்களாம். அப்புறம் பிரச்னையின் அடிப்படையில் ஆதரவுன்னு சொல்வாங்க..அப்புறம் ஆட்சியையே கவுத்திடுவாங்களோன்னு மக்கள் பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க..

1998 முதல் 2004 வரை நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை நினைச்சுப் பார்த்தா இப்போ நடக்கற ஆட்சியைக் கவுத்துடமாட்டாங்கன்னும் சில பேரு சொல்றாங்க..

காங்கிரஸ் சமாதனமாப் போயிடும்.. 2006 மே மாசம் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்ல சட்டசபைத் தேர்தல் முடியற வரைக்கும் பிரதமர் மன்மோகன்சிங்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க..

அப்புறம் சோனியாவுக்கு விசுவாசமான ஒரு குடியரசுத் தலைவரையும் தேர்ந்தெடுத்ததுக்குப் பிறகு குஸ்தியை வைச்சுக்கலாம்னு காங்கிரஸ் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடுவாங்க..

அதுவரை நடப்பதெல்லாம் நாடகம் தானோ?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 3:03 AM, Blogger Boston Bala said...

>>சோனியாவுக்கு விசுவாசமான ஒரு குடியரசுத் தலைவரையும் தேர்ந்தெடுத்ததுக்குப் பிறகு குஸ்தியை வைச்சுக்கலாம்னு காங்கிரஸ் ///

இப்பொழுது இருப்பவரும் அட்ஜஸ்ட் செய்து கொள்பவர்தானே?

 
At 7:21 AM, Blogger தெருத்தொண்டன் said...

சோனியாவைப் பிரதமராக ஏற்றுக்கொள்வதில் அவருக்கு உடன்பாடில்லாமல் கேள்விகளை எழுப்பினார் என்று பாரதிய ஜனதா ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அதனால்தான் அந்த வரி. நன்றி பாஸ்டன் பாலா.

 

Post a Comment

<< Home