தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?
ஜுலை 2 சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழா விளம்பரங்கள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் விழா. தமிழகத்தில் உள்ள மதுரையில் நடக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங் வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி வருகிறார். தமிழக ஆளுநர் பர்னாலா வருகிறார். மிக்க மகிழ்ச்சி.. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறதா இல்லையா? குடியரசுத் தலைவர் ஆட்சி தான் நடக்கிறதா? இந்த விளம்பரங்களையும் அழைப்பிதழ்களையும் மட்டும் பார்ப்பவர்கள் வருங்காலத்தில் அப்படித்தான் வரலாறை எழுதுவார்கள் என்று தோன்றுகிறது. வாழ்க ஜனநாயகம்! (விழாவில் கலந்து கொள்ள மனம் இடம்தரவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது எப்படி தெரியும்?)
2 Comments:
>>விழாவில் கலந்து கொள்ள மனம் இடம்தரவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா
மத்திய அரசு கூட்டணியில் இடம்பெறவில்லையே என்னும் வருத்தம்தான் ;-)
பாஸ்டன் பாலா, மூர்த்தி இருவருக்கும் எனது நன்றிகள். கொள்கையற்ற அரசியலும், தனிமனித விரோதங்களும் மனித மாண்புகளை நம்மிடம் இருந்து அழித்துவிடுகின்றன.
Post a Comment
<< Home