Saturday, July 02, 2005

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழா

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 150 ஆண்டு தமிழர்களின் கனவு நனவாகப் போகிறது. 2400 கோடி ரூபாயில் ஒரு கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற முயல்கிறது என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இன்றைய விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை.(புறக்கணிப்பு?). வைகோவின் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை. ஒருவித பதற்றத்துடன் இருந்தமாதிரி தெரிந்தது. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் முகத்தில் மட்டுமே வெற்றிக் களிப்பு தெரிந்தது.

சோனியா காந்தி சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் நலன் பாதுகாக்கப்படும் என்றார். அந்நியச் செலாவணியும் வணிகமும் தமிழகத்தில் பெருகி ஓடும் என்பதே இன்று தலைவர்களின் பேச்சின் பிரதான அம்சம்.

ரொட்டி இல்லை என்றால் என்ன? எல்லோரும் கேக் சாப்பிடலாம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 11:15 PM, Blogger மஞ்சூர் ராசா said...

அனைத்தும் நல்லதற்கே என நினைபோம்

 
At 12:08 AM, Blogger Voice on Wings said...

//இன்றைய விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை.(புறக்கணிப்பு?). வைகோவின் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை. ஒருவித பதற்றத்துடன் இருந்தமாதிரி தெரிந்தது.//

இது எனக்கு செய்தி. பொது விசாரணைகளில் மதிமுகவினர் திட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்றே படித்திருக்கிறேன். தென்னக மாவட்டக்காரரான வை.கோ.வுக்கு இத்திட்டம் குறித்து ஏதாவது மனமாற்றமா? ஜெயலலிதாவைப் போல் இவர்களும் மனம் மாறினால் நல்லதே.

வேதனையளிக்கும் செய்தி என்னவென்றால் அகழ்வுப் பணிகள் இன்றிலிருந்து தொடக்கமாம். நீதி தேவதையின் தராசும் ஒரேயடியாகத் திட்டத்துக்கு ஆதரவாகவே சாய்ந்துள்ளதால், stay வாங்கும் முயற்சிகளும் தோல்வியடையலாம்.

 
At 1:45 AM, Blogger வலைஞன் said...

டில்லியில் இத்திட்டத்திற்காக ஓயாது வாதாடி வந்த வைகோ இன்று அதன் முழுபெருமையும் தஙகளுக்கானதே என எக்காளமிடும் திமுக முன்னால் பதற்றத்துடன் தான் அமர்ந்திருக்க முடியும். கூட்டணி தர்மமும் குருபக்தியும் மீறிய மனப்பதட்டம் அது!

 
At 2:36 AM, Blogger kirukan said...

VaiKo deserves more credit than anyother current politicians in TN.

 
At 8:56 AM, Blogger தெருத்தொண்டன் said...

இந்த விழாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு விழாவாக நடத்தாமல் திமுகவின் அரசு விழாவாக நடத்துவதற்கு நடந்த முயற்சிகளில் மனம் வெறுத்து டாக்டர் ராமதாஸ் வரவில்லை என்று தெரிகிறது. வைகோவால் அப்படி முடிவெடுக்க இயலாது. அனுராக் சொல்வது போல் தர்மமும் பக்தியும் விழாவுக்கு அவரை அழைத்து வந்திருக்கும். ஆனால் பதற்றத்தை மறைக்க முடியவில்லை என்று கருதுகிறேன்.
உறுதி செய்யப்படாத உளவுத்துறைத் தகவல் ஒன்றின் காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக நடத்தினாலும் வைகோவுக்குள் ஜனநாயகத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது போலும்.
ஜனநாயகம் முரண்படும் உரிமையை வழங்குகிறது. விருப்பப்பட்டதைத் தேர்வுசெய்யும் உரிமையை வழங்குகிறது. ஆனால் விசுவாசம் அப்படி அல்ல. அது ஒருவித அடிமைத்தனத்தையே முன்மொழிகிறது. சரிதானா vow ?

//டில்லியில் இத்திட்டத்திற்காக ஓயாது வாதாடி வந்த வைகோ இன்று அதன் முழுபெருமையும் தஙகளுக்கானதே என எக்காளமிடும் திமுக முன்னால் பதற்றத்துடன் தான் அமர்ந்திருக்க முடியும். கூட்டணி தர்மமும் குருபக்தியும் மீறிய மனப்பதட்டம் அது!// அனுராக் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

//VaiKo deserves more credit than anyother current politicians in TN//கிறுக்கன் சொல்வதும் சரிதான். சரியோ தவறோ தனது நம்பிக்கைகளுக்காக தீவிரமாகப் பணியாற்றும் தன்மை கொண்டவராக வைகோ திகழ்கிறார். இந்திய நதிகளைத் தேசியமயமாக்கி இணைத்தல் உள்ளிட்ட அவரது பல கனவுகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவர் அதற்காக வீதியில் இறங்கி இயக்கம் நடத்தத் தயங்குவதில்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

 
At 11:44 AM, Blogger Voice on Wings said...

தெருத்தொண்டன், நீங்கள் 'சரிதானா' என்று என்னை நோக்கிக் கேட்பதற்கு என்ன விடையளிப்பதென்றுக் குழம்பிப் போயிருக்கிறேன். எனது அரசியல் அறிவு குறைவானதே.

என்னைப் பொருத்தவரை, எல்லா அரசியல் கட்சிகளின் ஆதரவும் இத்திட்டத்திற்கு உண்டு என்ற நிலை மாறி, இப்போது தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் தலைவர்கள் (ஜெயலலிதா மற்றும் இராமதாசு) இத்திட்டத்தின் தொடக்க விழாவைப் புறக்கணித்துள்ளனர் என்பதே வரவேற்கத் தக்க மாற்றமாகும். ஜெயலலிதா வெளிப்படையாக எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டது, சபாஷ்! இராமதாசுவின் விழாப் புறக்கணிப்பு, பலே! ('சபாஷ்', 'பலே' ஆகியவற்றை 'மீண்டும் கோகிலா' படத்தில் வரும் பாடல் வசனத்தின் தொனியில் வாசிக்கவும்்) வை.கோ.வும் இவ்வாறு மனம் மாறினால் இன்னும் மகிழ்ச்சியே.

எதிர்ப்புக் குரல்கள் வலுவடைந்தால், நீதிமன்றங்களிலும் அவற்றுக்கு செவிசாய்த்து சாதகமான தீர்ப்பெதாவது வழங்கக் கூடுமென்ற நப்பாசைதான்.

 

Post a Comment

<< Home