Tuesday, July 12, 2005

பின்னூட்ட சுதந்திரம்

அருண் வைத்தியநாதனின் பதிவு இது. பிரச்னை எதுவும் இல்லாத பதிவு என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு எனது பின்னூட்டமே இந்தப் பதிவு. பார்ப்பவர்கள் மன்னித்தருள்க!
//காலையில் எழுந்து பல் தேய்த்தேன். அதற்கப்புறம் சூப்பர் காபி குடித்தேன். குடித்து முடித்ததும் கொஞ்ச நேரம் கணிப்பொறியில் செய்திகள்…ஒன்றும் சுவாரஸ்யமாயில்லை! ஜம்மென்று குளியல்…டவலால் துவட்டல். அவசர அவசரமாய் ஆபிசுக்கு…..அவ்ளோ தான்.//
அருண்,
"நான் பார்த்ததிலே இந்தப் பதிவினைத்தான் நல்ல பதிவு என்பேன் நல்ல பதிவு என்பேன்"

சமீபகாலமாக பல வலைப்பதிவுகளில் பின்னூட்டங்கள் குறித்து வேதனை வெளிப்பட்டு வருகிறது. ஒரு முன்னோடியாக ஒரு பதிவு எப்படி இருந்தால் பிரச்னை வராது என்று நினைத்து எழுதிக் காட்டியிருக்கிறீர்கள்.
சும்மா இருப்பதே சுகம் என்பதும் ஒரு தத்துவமே. அதை ஒட்டியும் வெட்டியும் பின்னூட்டங்கள் இட்டு விவாதம் தொடர்ந்தால்....?

பல் தேய்த்தது என்ன பற்பசையால்? சுதேசியா விதேசியா? அமெரிக்காவில் இருந்தால் என்ன? இங்கிருந்து கோபால் பல்பொடி கொண்டு போகக் கூடாதா என்ன?

செய்திகள் தமிழில் பார்த்தீர்களா ஆங்கிலத்தில் பார்த்தீர்களா? ஆங்கிலத்தில் பார்த்தீர்கள் என்றால் உங்கள் கணினித் திரை மீது ஏன் கரிமை (தார்?) பூசக் கூடாது?

குளியல் என்றால் தலைக்குத் தண்ணீர் விடுவீர்களா அல்லது உடலைக் கழுவுவதுடன் சரியா? வெந்நீரிலா பச்சைத் தண்ணீரிலா? ஏன் இவ்வளவு உண்மைகளை சக வலைஞர்களிடம் இருந்து மறைக்கிறீர்கள்? அவர்களை நீங்கள் ஏன் மதிக்கத் தயங்குகிறீர்கள்? அல்லது தவறுகிறீர்கள்? இதற்குக் காரணம் .........தானா?
(இந்தக் கோடிட்ட இடம் தானே அவதூறுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது?)

புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் வந்து விட்டேன் அருண்..எப்படிப் பார்த்தாலும் பின்னூட்டர்களின் சுதந்திரம் மகத்தானது. நீங்கள் ஓரெழுத்துப் பதிவு போட்டாலும் ஒரு பக்கப் பின்னூட்டம் இட விமர்சகர்கள் நிறைந்த இடம் தமிழ்மணம்.("படிச்ச படிப்பைக் கூட சொல்ல விட மாட்டேங்கறியே" கல்யாணப்பரிசு)
அது சரி அருண், உங்கள் பதிவைப் படிக்கும்போது தோன்றாத எண்ணமெல்லாம் பின்னூட்டத் தொடங்கியதும் வந்து விழுகிறதே.. "அப்படி என்ன பூகம்பத்தை வைத்திருக்கிறீர்கள் உங்கள் பதிவில்..பொல்லாத போக்கிரி சார் நீங்கள்" (நன்றி. நினைத்தாலே இனிக்கும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 11:50 PM, Blogger -/பெயரிலி. said...

அடடே, இது குறித்த உங்களின் இருபதிவுகளுமே நன்றாக இருக்கின்றன. தில்லை வாழ் அந்தணர்தம் தெருத்தொண்டரடிப்பொடிக்கும் அடியானாகிய என் பதிவுக்கும் ஒரு கருத்துச் சொல்லுங்களேன். ப்ளீஸ்.... ஒரு + அல்லது - என்றாலும் குத்திவிடுங்களேன். ப்ளீஸ். முன்கூட்டிய நன்றி.

 
At 12:48 AM, Blogger தெருத்தொண்டன் said...

உங்கள் பதிவை அன்றே படித்தேன் பெயரிலி. ஆனால் பின்னூட்டமிடும் நேர்மை எனக்கு அன்று இல்லை. உங்கள் உணர்வுகள் என்னைச் சுட்டன. இப்போது பின்னூட்டமிட்டுவிட்டேன். நன்றி பெயரிலி.

 

Post a Comment

<< Home