Saturday, January 21, 2006

"அந்த" நண்பர் வாழ்க!

மட்டுறுத்தலுக்கு ஆதரவு சேர்க்கும் "அந்த" நண்பர் வாழ்க!

அன்பு நெஞ்சங்கள் அனைவர்க்கும் எனது பணிவான வணக்கங்கள்.

டோண்டுவின் பெயரில் எனது முந்தைய பதிவுக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. அதை எழுதிய நண்பர்
"தெருத்தொண்டன்......
எஸ்ரா உண்மையிலேயே எழுதி இருந்தால் அமைதியான கண்டனம் சரிதான். தவறு என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதே சமயம் அதிமுகவின் மகளிரணிபோல சேலை தூக்கிய போராட்டங்களும் நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம் போன்ற வகையிலான எஸ்ராவுக்கு எதிரான பேச்சுகளும் சரியல்ல. இதுதான் நான் நினைக்கிறேன்.

ஆப்டாபிக்:-

உங்கள் மேல் எனக்கு தனிமதிப்பு உண்டு. இனிமேல் முகமூடி, டோண்டு, மாயவரத்தான் போன்ற தீவிரவாத பார்ப்பன வலைப்பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்டால் எனது கடுமையான தாக்குதலுக்கு இலக்காக நேரிடும்.எனது கடுமையான எச்சரிக்கை! "

என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்னூட்டத்தில் அவர் டோண்டு பெயரில் போட்டதைத் தவிர வேறு பிரச்னை எதுவும் எனக்குத் தெரியவில்லை. மிரட்டல் அல்லது எச்சரிக்கை அவரது உரிமை என்றே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் அது டோண்டு (4800161) எழுதியது இல்லை என்பதால் அதை நீக்கினேன்.

நண்பருக்கு எனது "ஜனநாயக விரோத நடவடிக்கை" மீது கோபம் வந்துவிட்டது போலிருக்கிறது. அடுத்து வந்து இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

"தெருத்தொண்டன்,இனிமேல் நீங்கள் டோண்டு, மாயவரத்தான், முகமூடி போன்ற தெருப்பொறுக்கி பாப்பார பதிவில் பின்னூட்டம் இட்டால் எனது தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்று சொல்லிப் போக வந்தேன்.நலம் விரும்பி"

எத்தனையோ பதிவுகளில் மட்டுறுத்தலைப் பார்த்தும் நான் அப்போதெல்லாம் அதைப் பயன்படுத்தவில்லை. இப்போது அதைச் செயல்படுத்துவதே நல்லது என்ற எண்ணத்திற்கு வருகிறேன். "தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்று சிலர் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது.


உங்களில் பலரைப் போல அல்லது சிலரைப் போல கணினியுடன் அதிக நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. அதனால் உங்கள் பின்னூட்டங்கள் தாமதமாகவே பதிவில் தெரியும் நிலையை ஏற்படுத்தியமைக்காக உங்களிடம் நான் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.. வணக்கம்..

--

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At 2:17 PM, Blogger ஜென்ராம் said...

சோதனை..

 
At 11:01 AM, Blogger dondu(#11168674346665545885) said...

"இந்தப் பின்னூட்டத்தில் அவர் டோண்டு பெயரில் போட்டதைத் தவிர வேறு பிரச்னை எதுவும் எனக்குத் தெரியவில்லை. மிரட்டல் அல்லது எச்சரிக்கை அவரது உரிமை என்றே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் அது டோண்டு (4800161) எழுதியது இல்லை என்பதால் அதை நீக்கினேன்."

மிக்க நன்றி ராம்கி அவர்களே. என் பெயரில் வரும் பின்னூட்டங்களில் ஆபாசம் மிகுந்தவை உடனுக்குடனேயே கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆபாசம் இல்லாத என் பெயரில் வரும் பின்னூட்டங்களில் வேறு பிரச்சினை, அதாவது அது போலி என்று கண்டுகொள்ளப்படாமல் போவது.

இப்போதும் இளவஞ்சி பதிவில் அது வந்துள்ளது. மறுபடியும் மறுபடியும் என்னுடைய மூன்று சோதனைகளைப் பற்றிக் கூறி உங்களை போர் அடிக்க விரும்பவில்லை. மூன்றாம் சோதனையாக என்னுடைய இப்பின்னூட்டமும் என்னுடையத் தனிப்பதிவில் வழக்கம்போலவே பின்னூட்டமாக நகலிடப்படும் என்று சொல்லி வைக்கிறேன். அதைப் பார்த்துவிட்டே மட்டுறுத்தல் செய்யவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 6:21 PM, Blogger தெருத்தொண்டன் said...

//மறுபடியும் மறுபடியும் என்னுடைய மூன்று சோதனைகளைப் பற்றிக் கூறி உங்களை போர் அடிக்க விரும்பவில்லை.//

டோண்டு அவர்களே,
உங்கள் மூன்று சோதனைகளும் உலகப் பிரசித்தம் ஆயிற்றே..இன்னும் திரும்பக் கூற வேண்டுமா என்ன?

 
At 6:51 AM, Blogger மாயவரத்தான் said...

:D

 

Post a Comment

<< Home