Sunday, September 11, 2005

குழலியால் வந்த பதிவு

குழலி கேப்டனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காரு..அதைப் படிச்சுட்டு அவருக்குப் பின்னூட்டமா நான் கேப்டனுக்கு வேறு ஒரு சூழ்நிலையில்
16.07.2000 அன்று எழுதின பகிரங்கக் கடிதத்தின் சுட்டி கொடுக்க முயற்சி பண்ணினேன்.. எனக்குச் சரியா வரலைங்க.. அதனால அந்தக் கடிதத்தை இப்படி ஒரு பதிவாப் போட்டுட்டேன்..

இதுதாங்க அந்தக் கடிதம்.

இத்துடன் முடிச்சிருந்த பதிவை முகமூடி பார்த்துட்டு யுனிகோடுல போட்டா என்னன்னு கேட்டாரு. நாளைக்குப் போட்றேன்னு சொல்லிட்டு தூங்கப் போயிட்டேன். முழிச்சு வந்து பார்த்தா டோண்டு ராகவன் யூனிகோடுல போட்டு உதவி இருக்காரு.. அவருக்கு எனது நன்றியைப் பதிவு செய்கிறேன்.
இதோ 16.07.2000 தேதியிட்ட கடிதம்:

படைப்பாளிகளின் சுதந்திரம் அடமானப் பொருளா ?

நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு,

வணக்கங்க.

தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கற ரசிகர்கள் முதல் தலைநகரத்தில் இருக்கற முதல்வர் வரை ஆர்வம் காட்டற தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்னு சொல்லுவாங்க. அதுல போட்டியில்லாம நீங்க தலைவராத் தேர்ந்தெடுக்கப் பட்டதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்க மொழில சொல்லணும்னா நானெல்லாம் 'சி' சென்டர் ங்கற பிரிவுல வருவேன்னு நினைக்கறேன்ங்க. ஏழை ஜாதியின் நல்வாழ்வுக்குப் போராடற நல்லவனாத் தொடங்கின உங்க சினிமா வாழ்க்கை இப்போ வல்லரசு மாதிரியான நடிகர் சங்கத் தலைவர் இடத்துக்கு வந்திருக்கிறதைப் பார்த்து ரொம்ப சந்தோஷம்ங்க. அடுத்த படத்துக்கு 'சிம்மாசனம்'னு பெயர் வைச்சிருக்கீங்களாம். புல்லரிச்சுப்போயிட்டேன்ங்க இதைக் கேட்டு.

தமிழக முதல்வரா கோட்டைக்கு வரணும்னா அதுக்கு வழி கோடம்பாக்கம்தான்னு நிறைய பேரு நினைச்சிட்டிருக்காங்கங்கறது உங்களுக்குத் தெரியுமா? பஸ் புறப்படறதுக்கு முன்னாடி ஏறி தோள்ல இருக்கற துண்டெடுத்து இடம் பிடிக்கறதுக்குப் போடறதை, மதுரை பக்கத்துல பார்த்திருப்பீங்க. அதே மாதிரி 'அந்த' சிம்மாசனத்துக்கு துண்டு போட்டுட்டு நிறைய பேர் காத்திருக்காங்க. புரியுதுங்களா?

இதுக்காக யாரைங்க குறை சொல்ல முடியும்? எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து முதல்வரானவங்க எல்லோரும் கோடம்பாக்கத்தோட தொடர்பு இருக்கறவங்களாத்தான் இருக்காங்க. சரியாத் தெரியற சரியான உண்மைகள் எல்லாம் தப்பான நபர்களுக்கு சரியான உதாரணங்களாத் தப்பாத் தெரியறதை நினைச்சா, எது சரி எது தப்புன்னு புரியவே இல்லீங்க.

ஒரு மன்றத்தில பாதி அறை நிரம்பற அளவு கூட்டம் கூடினாலே அங்க வருங்கால முதல்வர்னு கோஷம் கேட்குதுன்னு கலைஞர் சொன்னாரு. அதன்படி பார்த்தா ஏகப்பட்ட வருங்கால முதல்வர்கள் சேர்ந்து உங்களை அவங்களோட தலைவராத் தேர்ந்தெடுத்திருக்காங்கன்னா, நிச்சயம் நீங்களும் வருங்கால முதல்வராத்தான் இருக்கணும் இல்லீங்களா..?

ஏற்கனவே அரசியல் கட்சிகள்ல நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. போதாக்குறைக்கு புதுசு புதுசா முளைக்கற சாதிச் சங்கங்கள்ல நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. நடிகர் சங்கத்துக்குள்ள பொறுப்புலயும், பொறுப்பு எதுவும் வகிக்காமலும் நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. இன்னும் வருங்கால முதல்வர்ங்கற இறுதி இலக்கை அடையறதுக்காக கிராமங்கள்லேர்ந்து எத்தனை பேர் டிக்கெட் இல்லாம சென்னை வந்து ஹீரோ ஆகறதுக்காக புறப்பட்டுட்டு இருக்கிறாங்களோ தெரியலீங்க. உங்க ரசிகர்களோட குரல் இந்தக் கும்பல்ல கரைஞ்சு போயிடுதுங்கறதுதான் வேதனையா இருக்குதுங்க.

சரி விடுங்க. அதெல்லாம் அதுக்கான காலம் வரும்போது பார்த்துக்கலாம். நீங்க தலைவராப் பதவி ஏற்றவுடனே நடிகர் சங்கக் கடனைத் தீர்க்கறதுதான் முதல் கடமைன்னு பேசியிருக்கீங்க. ரொம்ப யோசிச்சு நிதானமா முடிவெடுக்கறவர் நீங்க. அதுக்கப்புறம் எடுத்த முடிவுல உறுதியா செயல்படறவர் நீங்க. எல்லோரும் பேசறமாதிரி நீங்களும் பேசி மாட்டிக்கக் கூடாதேன்னு கவலையா இருக்குதுங்க.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து நடிகர் சங்கக் கடன் பத்தியும் கேள்விப்பட்டுக்கிட்டு தாங்க இருக்கேன். செவாலியே சிவாஜி சார் காலத்துலேர்ந்து கேட்கறதால, இது காற்றோட கரையப் போற வெறும் கோஷமோங்கற சந்தேகம் வர்றதைத் தவிர்க்க முடியலீங்க.

நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கறோம், கடனை அடைக்க மாட்டோமா என்ன என்கிற கேள்வியை இப்போ கேட்க முடியுதுங்க. சினிமா இன்டஸ்ட்ரி வளமா இருக்கும் போதும், நடிகர்கள் கொடிகட்டிப் பறந்த போதும் நடக்காத காரியம், இப்போ இன்டஸ்ட்ரியே தடுமாறிக்கிட்டு இருக்கும்போது நடக்கவாப் போகுதுன்னு ஒரு வேதனை கலந்த விரக்தியும் வருதுங்க.

அப்போதான் ஒரு பத்திரிகைல பார்த்தேன் ஒரு செய்தியை. சூப்பர் ஸ்டார் உங்ககிட்ட ரெண்டு ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னதாக அந்த செய்தி சொல்லிச்சுங்க. கூட்டத்துக்குக் கூட்டம் ஜெய்ஹிந்த் சொல்ற தேசியவாதி ரஜினிகாந்த், மதுரையில் நடந்த கார்கில் வீரர்களுக்கான ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கே வரலியே. இதுக்கு வந்துடுவாரான்னு தோணுதுங்க. வந்தா தேசத்தைவிட நடிகர் சங்கம் தான் அவருக்குப் பெரிசான்னு தோணும். வரலைன்னா நடிகர் சங்க நிகழ்ச்சிக்குக் கூட வரமாட்டேங்கறாரேன்னு தோணும்.

இதைத்தான் பக்கத்து வீட்டு படிச்ச தம்பி சொல்லும். உன் மனைவியை நீ அடிக்கறதை நிறுத்திட்டியாங்கற கேள்விக்கு பதில் சொல்ற மாதிரியான சங்கடமான நிலைமைன்னு.

சரி. அதையும் விட்டுடுங்க. சினிமாத் துறைக்கு முதல்வர் உதவிகள் இருக்கறதால இருவர், தேசிய கீதம் மாதிரி படம் எடுக்காதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. இதைத்தான்ங்க என்னால தாங்க முடியலை.

குடிக்கத் தண்ணீர் இல்லாம அத்திப்பட்டு கிராம மக்கள் நடத்துன போராட்டத்தை பாலசந்தர் அவரோட 'தண்ணீர் தண்ணீர்' படத்துல காட்டினாரே.

வேலை இல்லாமையும், வறுமையும், திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமையும், அன்றாட வாழ்வாகிவிட்ட ஒரு சமூகத்துல இளைஞர்கள் வன்முறையாளர்களாக மாறுவதை அற்புதமா பாரதிராஜா 'நிழல்கள்'ல காட்டினாரே.

தனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பென்ஷனுக்காக அரசு அலுவலகத்தின் படிகளில் துவண்டு போன காந்தியவாதி, இறுதிக் காட்சியில் ஆயுதம் தூக்க வைத்தாரே மணிவண்ணன் 'இனி ஒரு சுதந்திரத்தில்'.

வாயைக் கட்டி வயித்தைக் கட்டிச் சிறுகச் சிறுகச் சேமிச்சு, ஒரு மனை வாங்கி வீடு கட்டி நொந்து நூலாப் போன இளம் தம்பதிங்க தலைல லஞ்சம், அம்மி தூக்கிப் போட்டதை பாலுமகேந்திரா அவரோட 'வீடு' படத்தில் கவிதையாய்க் காட்டினாரே.

இதற்கெல்லாம் அவ்வப்போது அதிகார பீடத்தில் இருப்பவர்கள் படைப்பாளிகள் மீது விஷங்களைக் கக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறுங்க.

அவையெல்லாம் அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த கன்டனங்கள். இப்போது நீங்க உங்கள் இயக்குநர் தோழர்களது சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கறீங்க.

சமகால அரசியலில் பலம் வாய்ந்த இருவரைத் தனது படைப்பிலே பதிவு செய்தல் தவறுங்களா? எனக்குப் புரியலீங்க.

மதுரைலேர்ந்து வந்து கனவுத் தொழிற்சாலையின் தலைவரானதுனால, சாலைகளும், குடிநீரும், தெரு விளக்குகளும் இல்லாத குக்கிராமங்கள் மதுரையைச் சுத்தி இருக்கறதை நீங்க மறந்திருக்க மாட்டீங்க. இதைத் தானே சேரன் 'தேசிய கீதம்'ல சித்தரிச்சாரு.

இந்தப் படங்கள் எல்லாம் அந்தப் பிரச்சினையை முழுமையாகச் சரியாச் சித்தரிச்சதா என்றால் அது வேறு விஷயம். இது மாதிரி சப்ஜெக்ட்டையே படமாக எடுக்கக் கூடாதுன்னு நீங்க சொல்றது ரொம்ப வேதனையா இருக்குதுங்க.

இந்த மாதிரிப் படம் எடுக்கறவங்க எல்லாருக்கும் அந்த படத்துல நடிகர்கள் மிகக் குறைஞ்ச சம்பளத்துல நடிச்சுக் கொடுப்பாங்கன்னு வாக்குறுதி கொடுக்கறதுக்குப் பதிலா, அப்படிப் படமே எடுக்காதீங்கன்னு சொல்றீங்களே. அதை என்னால தாங்கவே முடியலீங்க. '

சிம்மாசனம்'னு படத்துக்குப் பெயர் வைச்ச உடனேயே மன்னராட்சி மனோபாவம் உங்களுக்கு வந்திட்டுதோங்கற கவலைலதான்ங்க இந்த லெட்டரை எழுதினேன்.

ஏற்கனவே சினிமா இன்டஸ்ட்ரில படைப்பாளிகளுக்கு ஒரு சுதந்திரமும் இல்லைங்க. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரங்க எல்லாரும் அந்த சுதந்திரத்தை ஆளுக்குக் கொஞ்சம் பறிச்சிட்டுப் போயிடறாங்க.

மிச்சம் மீதி இருக்கற சுதந்திரத்தையும்கூட, நீங்க அடமானமா கேட்கறீங்களே. ஒரு கேப்டன் கிட்டேயிருந்து இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலீங்க.

தெருத்தொண்டன்
theruthondan@negotiations.com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

11 Comments:

At 10:57 PM, Blogger முகமூடி said...

ஏங்க உங்க சுட்டிக்கு பதிலா யுனிகோடுல இங்கனயே பதிய கூடாதா. வெப் உலகத்துல என்ன எழுத்துருவோ தெரியல, படிக்க முடியல.

At 11:40 PM, Blogger தெருத்தொண்டன் said...

dynamic font - LT-TM-barani

நாளை யுனிகோடில் போடுறேன் முகமூடி..ஆனால் இரவாகும்..நள்ளிரவு இங்கே..இந்நேரத்தில் முகமூடியுடன் நீங்கள் வந்தால்....?

At 6:41 AM, Blogger dondu(#11168674346665545885) said...

பொங்குதமிழில் இட்டு ஒருங்குறியில் கொடுத்துள்ளேன்.
நடிகர் சங்கம் கடன் அடைக்கப்பட்டு விட்டது. சூப்பர்ஸ்டார் ஒத்துழைப்பு கொடுத்தார். ஆக, உங்கள் இரண்டு பயங்கள் பொய்த்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Now over to your hyperlinked letter:

To : Vijaykanth@dmk.com
Copy to : maniratnam@iruvar.com
cheran@desiyageetham.com
sub : படைப்பாளிகளின் சுதந்திரம் அடமானப் பொருளா ?

நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு,

வணக்கங்க. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கற ரசிகர்கள் முதல் தலைநகரத்தில் இருக்கற முதல்வர் வரை ஆர்வம் காட்டற தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்னு சொல்லுவாங்க. அதுல போட்டியில்லாம நீங்க தலைவராத் தேர்ந்தெடுக்கப் பட்டதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்க மொழில சொல்லணும்னா நானெல்லாம் 'சி' சென்டர் ங்கற பிரிவுல வருவேன்னு நினைக்கறேன்ங்க. ஏழை ஜாதியின் நல்வாழ்வுக்குப் போராடற நல்லவனாத் தொடங்கின உங்க சினிமா வாழ்க்கை இப்போ வல்லரசு மாதிரியான நடிகர் சங்கத் தலைவர் இடத்துக்கு வந்திருக்கிறதைப் பார்த்து ரொம்ப சந்தோஷம்ங்க. அடுத்த படத்துக்கு 'சிம்மாசனம்'னு பெயர் வைச்சிருக்கீங்களாம். புல்லரிச்சுப்போயிட்டேன்ங்க இதைக் கேட்டு.

தமிழக முதல்வரா கோட்டைக்கு வரணும்னா அதுக்கு வழி கோடம்பாக்கம்தான்னு நிறைய பேரு நினைச்சிட்டிருக்காங்கங்கறது உங்களுக்குத் தெரியுமா? பஸ் புறப்படறதுக்கு முன்னாடி ஏறி தோள்ல இருக்கற துண்டெடுத்து இடம் பிடிக்கறதுக்குப் போடறதை, மதுரை பக்கத்துல பார்த்திருப்பீங்க. அதே மாதிரி 'அந்த' சிம்மாசனத்துக்கு துண்டு போட்டுட்டு நிறைய பேர் காத்திருக்காங்க. புரியுதுங்களா?

இதுக்காக யாரைங்க குறை சொல்ல முடியும்? எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து முதல்வரானவங்க எல்லோரும் கோடம்பாக்கத்தோட தொடர்பு இருக்கறவங்களாத்தான் இருக்காங்க. சரியாத் தெரியற சரியான உண்மைகள் எல்லாம் தப்பான நபர்களுக்கு சரியான உதாரணங்களாத் தப்பாத் தெரியறதை நினைச்சா, எது சரி எது தப்புன்னு புரியவே இல்லீங்க.

ஒரு மன்றத்தில பாதி அறை நிரம்பற அளவு கூட்டம் கூடினாலே அங்க வருங்கால முதல்வர்னு கோஷம் கேட்குதுன்னு கலைஞர் சொன்னாரு. அதன்படி பார்த்தா ஏகப்பட்ட வருங்கால முதல்வர்கள் சேர்ந்து உங்களை அவங்களோட தலைவராத் தேர்ந்தெடுத்திருக்காங்கன்னா, நிச்சயம் நீங்களும் வருங்கால முதல்வராத்தான் இருக்கணும் இல்லீங்களா..?

ஏற்கனவே அரசியல் கட்சிகள்ல நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. போதாக்குறைக்கு புதுசு புதுசா முளைக்கற சாதிச் சங்கங்கள்ல நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. நடிகர் சங்கத்துக்குள்ள பொறுப்புலயும், பொறுப்பு எதுவும் வகிக்காமலும் நிறைய வருங்கால முதல்வர்கள் இருக்காங்க. இன்னும் வருங்கால முதல்வர்ங்கற இறுதி இலக்கை அடையறதுக்காக கிராமங்கள்லேர்ந்து எத்தனை பேர் டிக்கெட் இல்லாம சென்னை வந்து ஹீரோ ஆகறதுக்காக புறப்பட்டுட்டு இருக்கிறாங்களோ தெரியலீங்க. உங்க ரசிகர்களோட குரல் இந்தக் கும்பல்ல கரைஞ்சு போயிடுதுங்கறதுதான் வேதனையா இருக்குதுங்க.

சரி விடுங்க. அதெல்லாம் அதுக்கான காலம் வரும்போது பார்த்துக்கலாம். நீங்க தலைவராப் பதவி ஏற்றவுடனே நடிகர் சங்கக் கடனைத் தீர்க்கறதுதான் முதல் கடமைன்னு பேசியிருக்கீங்க. ரொம்ப யோசிச்சு நிதானமா முடிவெடுக்கறவர் நீங்க. அதுக்கப்புறம் எடுத்த முடிவுல உறுதியா செயல்படறவர் நீங்க. எல்லோரும் பேசறமாதிரி நீங்களும் பேசி மாட்டிக்கக் கூடாதேன்னு கவலையா இருக்குதுங்க.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து நடிகர் சங்கக் கடன் பத்தியும் கேள்விப்பட்டுக்கிட்டு தாங்க இருக்கேன். செவாலியே சிவாஜி சார் காலத்துலேர்ந்து கேட்கறதால, இது காற்றோட கரையப் போற வெறும் கோஷமோங்கற சந்தேகம் வர்றதைத் தவிர்க்க முடியலீங்க.

நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கறோம், கடனை அடைக்க மாட்டோமா என்ன என்கிற கேள்வியை இப்போ கேட்க முடியுதுங்க. சினிமா இன்டஸ்ட்ரி வளமா இருக்கும் போதும், நடிகர்கள் கொடிகட்டிப் பறந்த போதும் நடக்காத காரியம், இப்போ இன்டஸ்ட்ரியே தடுமாறிக்கிட்டு இருக்கும்போது நடக்கவாப் போகுதுன்னு ஒரு வேதனை கலந்த விரக்தியும் வருதுங்க.

அப்போதான் ஒரு பத்திரிகைல பார்த்தேன் ஒரு செய்தியை. சூப்பர் ஸ்டார் உங்ககிட்ட ரெண்டு ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னதாக அந்த செய்தி சொல்லிச்சுங்க. கூட்டத்துக்குக் கூட்டம் ஜெய்ஹிந்த் சொல்ற தேசியவாதி ரஜினிகாந்த், மதுரையில் நடந்த கார்கில் வீரர்களுக்கான ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கே வரலியே. இதுக்கு வந்துடுவாரான்னு தோணுதுங்க. வந்தா தேசத்தைவிட நடிகர் சங்கம் தான் அவருக்குப் பெரிசான்னு தோணும். வரலைன்னா நடிகர் சங்க நிகழ்ச்சிக்குக் கூட வரமாட்டேங்கறாரேன்னு தோணும்.

இதைத்தான் பக்கத்து வீட்டு படிச்ச தம்பி சொல்லும். உன் மனைவியை நீ அடிக்கறதை நிறுத்திட்டியாங்கற கேள்விக்கு பதில் சொல்ற மாதிரியான சங்கடமான நிலைமைன்னு.

சரி. அதையும் விட்டுடுங்க. சினிமாத் துறைக்கு முதல்வர் உதவிகள் இருக்கறதால இருவர், தேசிய கீதம் மாதிரி படம் எடுக்காதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. இதைத்தான்ங்க என்னால தாங்க முடியலை.

குடிக்கத் தண்ணீர் இல்லாம அத்திப்பட்டு கிராம மக்கள் நடத்துன போராட்டத்தை பாலசந்தர் அவரோட 'தண்ணீர் தண்ணீர்' படத்துல காட்டினாரே.

வேலை இல்லாமையும், வறுமையும், திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமையும், அன்றாட வாழ்வாகிவிட்ட ஒரு சமூகத்துல இளைஞர்கள் வன்முறையாளர்களாக மாறுவதை அற்புதமா பாரதிராஜா 'நிழல்கள்'ல காட்டினாரே.

தனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பென்ஷனுக்காக அரசு அலுவலகத்தின் படிகளில் துவண்டு போன காந்தியவாதி, இறுதிக் காட்சியில் ஆயுதம் தூக்க வைத்தாரே மணிவண்ணன் 'இனி ஒரு சுதந்திரத்தில்'.

வாயைக் கட்டி வயித்தைக் கட்டிச் சிறுகச் சிறுகச் சேமிச்சு, ஒரு மனை வாங்கி வீடு கட்டி நொந்து நூலாப் போன இளம் தம்பதிங்க தலைல லஞ்சம், அம்மி தூக்கிப் போட்டதை பாலுமகேந்திரா அவரோட 'வீடு' படத்தில் கவிதையாய்க் காட்டினாரே.

இதற்கெல்லாம் அவ்வப்போது அதிகார பீடத்தில் இருப்பவர்கள் படைப்பாளிகள் மீது விஷங்களைக் கக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறுங்க.

அவையெல்லாம் அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த கன்டனங்கள். இப்போது நீங்க உங்கள் இயக்குநர் தோழர்களது சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கறீங்க.

சமகால அரசியலில் பலம் வாய்ந்த இருவரைத் தனது படைப்பிலே பதிவு செய்தல் தவறுங்களா? எனக்குப் புரியலீங்க.

மதுரைலேர்ந்து வந்து கனவுத் தொழிற்சாலையின் தலைவரானதுனால, சாலைகளும், குடிநீரும், தெரு விளக்குகளும் இல்லாத குக்கிராமங்கள் மதுரையைச் சுத்தி இருக்கறதை நீங்க மறந்திருக்க மாட்டீங்க. இதைத் தானே சேரன் 'தேசிய கீதம்'ல சித்தரிச்சாரு.

இந்தப் படங்கள் எல்லாம் அந்தப் பிரச்சினையை முழுமையாகச் சரியாச் சித்தரிச்சதா என்றால் அது வேறு விஷயம். இது மாதிரி சப்ஜெக்ட்டையே படமாக எடுக்கக் கூடாதுன்னு நீங்க சொல்றது ரொம்ப வேதனையா இருக்குதுங்க.

இந்த மாதிரிப் படம் எடுக்கறவங்க எல்லாருக்கும் அந்த படத்துல நடிகர்கள் மிகக் குறைஞ்ச சம்பளத்துல நடிச்சுக் கொடுப்பாங்கன்னு வாக்குறுதி கொடுக்கறதுக்குப் பதிலா, அப்படிப் படமே எடுக்காதீங்கன்னு சொல்றீங்களே. அதை என்னால தாங்கவே முடியலீங்க.

'சிம்மாசனம்'னு படத்துக்குப் பெயர் வைச்ச உடனேயே மன்னராட்சி மனோபாவம் உங்களுக்கு வந்திட்டுதோங்கற கவலைலதான்ங்க இந்த லெட்டரை எழுதினேன்.

ஏற்கனவே சினிமா இன்டஸ்ட்ரில படைப்பாளிகளுக்கு ஒரு சுதந்திரமும் இல்லைங்க. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரங்க எல்லாரும் அந்த சுதந்திரத்தை ஆளுக்குக் கொஞ்சம் பறிச்சிட்டுப் போயிடறாங்க.

மிச்சம் மீதி இருக்கற சுதந்திரத்தையும்கூட, நீங்க அடமானமா கேட்கறீங்களே. ஒரு கேப்டன் கிட்டேயிருந்து இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலீங்க.

தெருத்தொண்டன்
theruthondan@negotiations.com

At 7:00 AM, Blogger தெருத்தொண்டன் said...

டோண்டு ராகவன்,
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி சார்..உங்கள் அனுமதியுடன் அதையே எடுத்துப் பதிவில் பயன்படுத்திக் கொள்கிறேன்.

At 7:11 AM, Blogger dondu(#11168674346665545885) said...

அடடா இதற்கெல்லாம் என்ன அனுமதி தேவையா? உங்கள் அனுமதி பெற்றா நான் உங்கள் வெப் உலகச் சுட்டிப் பதிவை ஒருங்குறியில் இட்டேன்? எல்லாம் ஒருவருக்கொருவர் உதவிதானே. உங்கள் எதிர்க்காலத் தேவைக்கு:
பொங்குதமிழ் எழுத்துருமாற்றியை உங்கள் வன்தகட்டில் இறக்கிக் கொள்ளுங்கள். புழக்கத்திலிருக்கும் பல எழுத்துருக்களை ஒருங்குறியில் மாற்றிக் கொள்ளும் வசதி அதில் உள்ளது. பார்க்க:
http://www.suratha.com/reader.htm

அன்புடன்,
டோண்டு ராகவன்

At 8:18 AM, Blogger முகமூடி said...

டோண்டு, நானும் சுரதாவில் முயற்சி செய்தேனே... அப்புறம் encoding>user defined என்று எக்ஸ்ப்ளோரரிலேயே படித்துவிட்டேன்.

------------------

தொண்டன், உங்க கேள்வி - அதுவும் இயக்குனர்களின் உரிமையில் தலையிடுவது குறித்த கேள்வி - மிகவும் சரியானதே.. ஆனால் விஜயகாந்த் "அரசியல்வாதி" ஆகி ரொம்ப நாளாச்சுங்களே...

------------------

நம்பி,

விஜயகாந்த் தொப்புளில் பம்பரம் விட்டதை கேள்வி கேட்கவா இரண்டு லட்சம் மக்கள் ஓட்டு போட்டனர்.. அதுவரை விஜயகாந்த் பதில் சொல்லும் உரிமை அவருக்கானது. மக்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஓட்டு வாங்கியவர்கள் "தலைவர்கள்" பதில் சொல்லிவிட்டார்களா?

At 9:39 AM, Blogger dondu(#11168674346665545885) said...

ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். முகமூடியின் பின்னூட்டத்தைப் படிக்கும் வரை உங்கள் சுட்டியில் உள்ள கடிதம் மற்றவர்களால் நேரடியாகப் படிக்க முடியவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் என் கணினியில் அக்கடிதத்தைப் படிப்பதில் ஒரு பிரச்சினையும் எழவில்லை. ஆகவே அதுவே எனக்கு ஒரு நியூஸ்தான். நிற்க.

நான் விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருக்கிறேன். TSCu Paranar மற்றும் theeniuni fontS-களை செலக்ட் செய்துள்ளேன். ஆகவே பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

At 2:34 PM, Blogger முகமூடி said...

நம்பி,

// His past record is this guy neither respects heroines nor actress in general //

இப்பவும் நடிகர் சங்கத்தலைவர் என்ற முறையில மன்னிப்பு கூத்தில் முன்னிலை வகித்திருக்கலாம்...

// The underlined tone in that reply from Vijayakanth is "You are a (Adhi)Dravidan" //

எனக்கு அப்படி தோணலைங்க.

// Would his reply be the same if Ramdoss, Vaiko, MK, JJ questioned him? //

MK, JJ பத்தி தெரியல.. ராமதாஸ் (ஏற்கனவே நிரூபிச்சிட்டாரு) வைகோவுக்கு சாத்தியம்தான்

At 4:43 PM, Blogger தாணு said...

நரம்பில்லா நாக்கு நாலும் பேசும். சினிமாவில் ஜெயிக்க படைப்பாளிகள் உதவி தேவை. அந்த எல்லை தாண்டியபின், ஏற்றி வைக்கும் ஏணிக்கென்ன மதிப்போ அதுதானே படைப்பாளிகள் மதிப்பும். கேப்டன் மட்டுமென்ன மகாத்மாவா?

At 9:50 PM, Blogger தெருத்தொண்டன் said...

முகமூடி நன்றி.. நம்பி, டோண்டு,தாணு நன்றிகள்.

At 12:13 AM, Blogger erode soms said...

ஒருSMS ஜொக் உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்

விஜய்காந்த் : டேய் அந்த TV மேல
கேஸ் போடனுண்டா
தொண்டன் : ஏன் தலைவா
வி காந்த் : நாமகட்சி ஆரம்பிச்ச நியூச விளையாட்டுச்
செய்தில போட்டிக்கான் டா!

Post a Comment

<< Home