ச்சீ ச்சீ இந்த ஸ்வீட் புளிக்கும்
கற்பாம் மானமாம்
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்
- ஏதோ ஒரு சினிமாப் பாடல் ஒலிக்கிறது.
"நமது நாடு சுதந்திர நாடு.
ஜனநாயக நாடு. நமது அரசமைப்பு சட்டம் தனிமனித சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் குடிமக்களுக்கு அளித்துள்ளது."
- காலாண்டுத் தேர்வுக்கு சமூக அறிவியல் படிக்கிறான் சிறுவன்.
"உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும், பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம், என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள் அதாவது குழந்தைகளை பயமுறுத்த பெரியவர்கள் 'பூச்சாண்டி' 'பூச்சாண்டி' என்பதுபோல இவை எளியோரையும் பாமர மக்களையும், வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியாகும்.''
----- அரசியலில் ஒழுக்கமா இருக்க முடியலே. எவனாயிருந்தாலும் மதத்திற்குக் கூட, காட்டிக்க முடியுதே தவிர, தத்துவப்படி நடக்க எவனாலும் முடியலே. ஒழுக்கம்'னு இன்னொருத்தனுக்கு சொல்றமே தவிர, அந்த வாய்ப்புக் கிடைச்சா நாமும் அந்தத்தவறு பண்ணத் தயாராயிருக்கோம். அனுபவத்திலே சொல்றேன். நான் அப்படி இருக்கும்போது சும்மா ஒழுக்கம்னு சொல்லி இன்னொருத்தனை ஏமாத்தறதிலே என்ன இலாபம் சொல்லுங்க.--
வாலிப வயதில் நானாகத் தேடிப் படித்த பெரியாரின் கருத்து. (ரோசா வசந்த் பதிவில் இருந்து எடுத்தாள்கிறேன். அவருக்கு என் நன்றி)
திருமணமோ அல்லது வேறெந்த உறவோ அதில் சம்பந்தப்பட்டிருப்பவர்களின் நலனைமிஞ்சி தனக்கென தனித்தகுதியையும், புனிதத்தையும்கொண்டிருக்கக்கூடாது. முற்றும் முழுதாக அதில் சம்பந்தப்பட்டவர்களின் நலனே பிரதானமாக இருக்கவேண்டும். அப்படி இருவரும் தமது நலன்களை அடுத்தவரை பலிகொடுக்காமல் பாதுகாத்துக்கொள்ள ஒரு அடிப்படை நேர்மையும், சுயமரியாதையும் அவ்விருவர்களுக்கும் வேண்டும். இவ்விரண்டும் (நேர்மையும், சுயமரியாதையும்) திருமணம் புனிதமானது; குடும்பம் கோயில், கணவன் தெய்வம், கற்புள்ள மனைவி பெருந்தெய்வம் போன்ற கருத்தாக்கங்களால் முற்றாக அழிக்கப்படுகிறது. இதனால் அடிமைப்படுத்தலும், அடிமைப்படுவதும் சாத்தியமாகிறது. இதில் ஆண்களின் நலன்கள் பூரணமாகக் காக்கப்படுவதால் அவன் இந்த சமூக விழுமியங்களை எப்பாடுபட்டாவது காக்கமுனைவது இயல்பு. இக்கருத்தாக்கங்களுக்கு பலியான பெண்கள் இதை ஆதரிப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
-- இதற்கு நன்றி தங்கமணிக்கு..
விமர்சனம் என்ற ஆயுதத்தை
பயன்படுத்துங்கள்..
ஆயுதம் என்ற விமர்சனத்தை
உபயோகிக்காதீர்கள்..
…. எப்போதோ பக்கத்து வீட்டு படிச்ச தம்பி
என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னது.
என்னவோ தொடர்பில்லாமல் ஏதேதோ போட்டிருக்கேன்.. மன்னிப்புக் கேள் அல்லது வலைப்பதிவை விட்டு வெளியேறுன்னு சொன்னா நான் என்ன செய்வது..
16 Comments:
தொடர்பில்லாமலா போட்டிருக்கிறீர்கள்?
நாம் இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வளர வேண்டியதிருக்கிறது.
இந்தப்பக்கத்தை குழலி படிப்பார் என நம்புகிறேன்..நீங்கள் எடுத்தாண்டுள்ள கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகிறேன்
சமூகத்துக்கும், சொந்த விஷயத்துக்கும் தொடர்பு இருக்கா?
ஒரு நடிகை இப்படிச் சொன்னதுக்கு மிரட்டல். ஒரு நடிகை செஞ்சுகாட்டுனதுக்கு கப்சுப்.
கற்பு இருக்கரது மனசிலா உடம்பிலா?
இது பெண்ணுக்கு மட்டுமேயா இல்லை எல்லோருக்குமா?
ஒண்ணும் புரியலை.
நல்ல பதிவு! களவொழுக்கம் கண்ட தமிழ் முன்னோர்களையெல்ல்லாம் ஒழுக்ககேடர்களாக்கி சாதனை புரிகிறார்கள் நவீன கலாச்சாரக் காவலர்காள்!
//நமது அரசமைப்பு சட்டம் தனிமனித சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் குடிமக்களுக்கு அளித்துள்ளது//
இது பாடப்புத்தகத்தில் உள்ளதா அல்லது நீங்கள் சாராம்சமாகக் குறிப்பிட்டதா எனத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் அரசமைப்புச் சட்டம் தனிமனித சுதந்திரத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியுமே அன்றி அளிக்க முடியாது; சுதந்திரம் என்பது பிறப்புரிமை.
நானும் இதைப்பற்றி இன்று நினைத்திருந்தேன். பதியவும் செய்திருக்கிறேன். வருந்தத்தக்க நிகழ்ச்சிகள்
நன்றி தருமி. நாம் வள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளர்கிறோமே தருமி..
எல்லா சமூக நியாயங்களையும் நடிகர் சங்க வாசலில் தேடுகிறோமே..
என்ன அற்புதமான வளர்ச்சி..
நன்றி ரவிசங்கர்,
துடிப்பான ஜனநாயக உணர்வுள்ள சிலர் கூட தவறான முன்னுரிமையை
சில விஷயங்களில் கொடுத்து விடுகிறார்கள்.
நன்றி தருமி. நாம் வள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளர்கிறோமே தருமி..
எல்லா சமூக நியாயங்களையும் நடிகர் சங்க வாசலில் தேடுகிறோமே..
என்ன அற்புதமான வளர்ச்சி..
நன்றி ரவிசங்கர்,
துடிப்பான ஜனநாயக உணர்வுள்ள சிலர் கூட தவறான முன்னுரிமையை
சில விஷயங்களில் கொடுத்து விடுகிறார்கள்.
துளசி கோபால்,
அம்மன் மாதிரி ஏராளமான நகை நட்டுகளோடு எனது தளத்திற்கு
வருகை தந்தமைக்கு நன்றி. குஷ்பூ ஓரிரு அம்மன் படங்களிலும் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஆயிரம் வலைப்பதிவுகள் இனி நீங்கள் போட்டாலும் அந்த அம்மன் பதிவுக்கு ஈடாகாது.
தங்கமணி,
நீங்கள் சொல்வது சரிதான். திருத்துவதைவிட அந்த வரிகளும் உங்கள் பின்னூட்டமும் அப்படியே இருப்பதே பதிவின் " கற்பு" கெடாமல் இருக்க உதவும் என்று நினைக்கிறேன்.
தேன்துளி,
உங்கள் பதிவைப் பார்த்தேன். நல்ல பதிவு.
This comment has been removed by a blog administrator.
//ஒரு நடிகை இப்படிச் சொன்னதுக்கு மிரட்டல். ஒரு நடிகை செஞ்சுகாட்டுனதுக்கு கப்சுப்.
//
துளசியக்கா இதில் உள்குத்து அரசியலும் உண்டு, தங்கர் பிரச்சினையில் தேவையின்றி அளவுக்கு மீறிய வினைபுரிந்த குஷ்பு தற்போது அதை அறுவடை செய்கின்றார்.
குழலியின் வருகைக்கு நன்றி. ஒன்றா இரண்டா உள்குத்துக்கள்?
துடைப்பங்களும் செருப்புகளும் கேவலமான பொருட்கள் என்று ஒரு படை நடிகர் சங்க வாசலிலும் குஷ்பூ வீட்டு வாசலிலும் படம் காட்டியிருக்கிறது. இதுவரை எந்த "இயம்" இந்தக் கருத்தைப் பரப்பி வந்ததோ அதையே தான் நாமும் உள்வாங்கி செயல்படுகிறோம் என்பதும் ஒரு உள்குத்து அரசியல்தான்.
//தமது நலன்களை அடுத்தவரை பலிகொடுக்காமல் பாதுகாத்துக் கொள்ள// இந்தக் கூற்றுக்கு தெருத்தொண்டனின் விளக்கம் என்னவென்று புரியவில்லை. மனைவிக்குத் தெரிந்து அவள் சங்கடப்படாத வரை பக்கத்து வீட்டுப் பெண்ணை சைட் அடிக்கலாம் என்று பொருள் கொள்ளலாமா?
ஆனால் பெண்களின் நலன்மட்டும் கணவரைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும், பக்கத்து வீட்டு படிச்ச தம்பியை சைட் அடிச்சுடக்கூடாது. கற்புன்னு ஒரு gold-plated license தொங்க விடப்பட்டிருக்குதில்லையா?
அடிப்படை நேர்மை எல்லா உறவுகளிலும் இருக்கணும், கணவன் மனைவிகளுக்கு மட்டும் தேவைப்படுவது அல்ல. சுயமரியாதை ரெண்டுபாலாருக்கும் வேணும், பெண்களுக்கு இருப்பதை உங்களால் தாங்க முடிவதில்லையே!
குடும்பம், கணவன்,மனைவி போன்றவை ஆரோக்கியமான உறவுக்கு பாலமாக வேண்டும். கோயில், தெய்வம் போன்ற அடைமொழிகளும் வேண்டாம், அடுத்து வரும் இகழ்மொழிகளும் வேண்டாம்.
ஒரு `பெண்’ கருத்து சொன்னதால்தானே இத்தனை அலசல்கள். ஒரு `சாமியார்’ இப்படிச் சொல்லியிருந்தா, இன்னேரத்துக்கு அது தமிழ்நாட்டின் தாரக மந்திரமாகியிருக்கும்- ``கல்யாணத்துக்கு முன் உடலுறவு;கடவுளை அடையும் வழி”-என்று!!!!
This comment has been removed by a blog administrator.
// தங்கர் பிரச்சினையில் தேவையின்றி அளவுக்கு மீறிய வினைபுரிந்த குஷ்பு //
குஷ்புவுக்கு சிங்கப்பூரில் பலத்த எத்ப்பு இருந்ருக்கும் போல என்று வலதுசாரி தட்ஸ்டமில் இயம்பியுள்ளது... அதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை...
****
உங்கள் பார்வை அழகு... செருப்போடும் துடைப்பத்தோடும் போராடுகிறது மகளிர் அணி... அடங்க மறூத்த தலைவன் அடக்கியாள ஆசைப்படுகிறான். கயவாளிகள் கலாச்சாரம் பற்றி பேசுவதைத்தான் காலப்பரிமாண வளர்ச்சி என்கிறது புருட புராணம்
நன்றி முகமூடி
//கயவாளிகள் கலாச்சாரம் பற்றி பேசுவதைத்தான் காலப்பரிமாண வளர்ச்சி என்கிறது புருட புராணம் //
இதில் ஏதும் உள்குத்து இல்லையே..
Post a Comment
<< Home