Thursday, June 30, 2005

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?

ஜுலை 2 சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழா விளம்பரங்கள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் விழா. தமிழகத்தில் உள்ள மதுரையில் நடக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங் வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி வருகிறார். தமிழக ஆளுநர் பர்னாலா வருகிறார். மிக்க மகிழ்ச்சி.. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறதா இல்லையா? குடியரசுத் தலைவர் ஆட்சி தான் நடக்கிறதா? இந்த விளம்பரங்களையும் அழைப்பிதழ்களையும் மட்டும் பார்ப்பவர்கள் வருங்காலத்தில் அப்படித்தான் வரலாறை எழுதுவார்கள் என்று தோன்றுகிறது. வாழ்க ஜனநாயகம்! (விழாவில் கலந்து கொள்ள மனம் இடம்தரவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது எப்படி தெரியும்?)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கிழவியைத் தூக்கி மனையில் வை!

ஜுலை இரண்டாம் தேதி.. மதுரையில் சேது சமுத்திரத் திட்டம் தொடக்க விழா..
சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் மீனவர்களும் கடல்வாழ் உயிரினங்கள் மீது அக்கறை கொண்டோரும் எழுப்பிய எதிர்ப்புக் குரல்கள் புறந்தள்ளப்பட்டன.

தமிழகத்திற்குப் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்த போது சுற்றுச் சூழலைக் காரணம் காட்டி முட்டுக்கட்டை போட்டவர் டி.ஆர்.பாலு. இப்போது சேது சமுத்திரத் திட்டம் குறித்து எழுப்பப்படும் நியாயமான ஐயங்கள் கூட ஒதுக்கப்படுகின்றன. ஜெயலலிதா இப்போது சுற்றுச் சூழல் குறித்துப் பேசுவதும் பாலு பெருந்திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதும் வாழ்க்கை முரண்.

எப்போதுமே இருவருக்கும் சுற்றுச் சூழல் குறித்து உண்மையான அக்கறை இருந்திருக்காது. ஏதேனும் ஒரு கோணத்தில் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்படுவது மேலதிக வேடிக்கைக் காட்சி.

கிணற்றைத் தூர்வாரினால், சாலைகள் போட்டால், வேலை நடந்ததா இல்லையா என்று மக்களுக்குத் தெரியும். கடலை ஆழப்படுத்தினார்களா இல்லையா என்பதை யார் பார்ப்பார்கள்? ஆழப்படுத்தப்படும் மண்ணின் தன்மை, எடுத்த மண் எங்கு கொட்டப்படும், விளைவு, கப்பல் பழுது, விபத்து, எண்ணெய்க் கசிவு, ஒருவழிப்பாதை, கட்டணங்கள் என்று அலைஅலையாய்க் கேள்விகள் .. தூத்துக்குடி அருகே உள்ள பவளப்பாறைகள், சின்னச் சின்னத் தீவுகள் கதி என்ன என்பதும் விவாதத்திற்கு உரியவை என்கிறார்கள் நிபுணர்கள்..
குரல் கொடுத்த வைகோவுக்கு முக்கியத்துவம் இல்லையா இருக்கா விவாதம் ஊடகங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வை..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 29, 2005

போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!

இட ஒதுக்கீடு பிரச்னை இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டது. அரசாங்கத்தில் வேலைக்கு ஆள் நியமனத் தடை இருக்கிறது. சமமான கல்வி, சமமான வாய்ப்பு, சமூக நலனில் அரசின் பங்கு போன்ற எண்ணற்ற விஷயங்களில் அரசுகள் கைகழுவத் தொடங்கி விட்டன. இந்நிலையில்தான் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம் எழுகிறது. சமூகநீதி என்ற பார்வையில் நாம் பார்க்காத வரையில் ஒருவரது வாழ்க்கையை மற்றவர் பறித்த உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க முடியாது. அதேசமயம் வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை நிகழ்காலத்தில் சரிசெய்ய முற்படுவதிலும் பிரச்னைகள் இருக்கின்றன என்றே புரிந்து கொள்ள முடிகிறது.
தகுதியும் திறமையும் கிராமங்களில் இல்லை என்ற வாதமெல்லாம் எங்கும் எடுபடாது. நகர்ப்புறங்களிலும் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதும் சரியல்ல. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அது கோபாலபுரம் டிஏவி, எஸ்பிஓஏ, பிஎஸ் போன்ற பள்ளிகளைப் போல் ஒருநாளும் வரப்போவதில்லை.
ராஜிவ்காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை மாணவர்களை பல கூறுகளாகப் பிரித்தது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அதிக திறன் கொண்டோரைத் தயாரிக்கும் கல்வி, குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி, கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்வதுடன் ஒரு கல்வி என்று.. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் எந்த சமூகத்திலும் சமத்துவத்தை விரும்புவதில்லை.
அந்த அடிப்படைப் பிரச்னைகளை விட்டுவிட்டு அந்தக் கொள்ளைக்கெல்லாம் உடனிருந்து ஆதரவு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தவுடன் இடஒதுக்கீடு, சமூகநீதி, கிராமப்புற மாணவர் நலன் என்று உதட்டளவில் பேசித் திரிபவர்களை –வலைஞர்களே, இனம் கண்டு கொள்ளுங்கள் !
போலி நளன்களைக் கண்டு ஏமாறும் தமயந்திகள் அல்ல என்பதை உணர்த்துங்கள்!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைச்சுடுவீங்களோ?

இந்தியாவுல இந்த மக்களவைல தான் இடதுசாரிகளுக்கு 61 பேர் அபூர்வமா கிடைச்சிருக்கு.. ஆனா இப்போ ஆளும் கூட்டணியோட இருக்கற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போறாங்களாம். அப்புறம் பிரச்னையின் அடிப்படையில் ஆதரவுன்னு சொல்வாங்க..அப்புறம் ஆட்சியையே கவுத்திடுவாங்களோன்னு மக்கள் பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க..

1998 முதல் 2004 வரை நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை நினைச்சுப் பார்த்தா இப்போ நடக்கற ஆட்சியைக் கவுத்துடமாட்டாங்கன்னும் சில பேரு சொல்றாங்க..

காங்கிரஸ் சமாதனமாப் போயிடும்.. 2006 மே மாசம் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்ல சட்டசபைத் தேர்தல் முடியற வரைக்கும் பிரதமர் மன்மோகன்சிங்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க..

அப்புறம் சோனியாவுக்கு விசுவாசமான ஒரு குடியரசுத் தலைவரையும் தேர்ந்தெடுத்ததுக்குப் பிறகு குஸ்தியை வைச்சுக்கலாம்னு காங்கிரஸ் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடுவாங்க..

அதுவரை நடப்பதெல்லாம் நாடகம் தானோ?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, June 25, 2005

நடிப்புச் சுதேசிகள்

வலையில பூ போடும் எல்லோருக்கும் என்னோட வணக்கம்ங்க..
விஜயகாந்த் அடுத்து நடிக்கப் போற படம் பேரு 'சுதேசி' யாம். இவர் எதுக்குங்க இந்தப் பேரை இப்போ தேர்ந்தெடுக்கறாரு? சோனியா காந்திக்கு எதிரா அரசியல் நடத்தப் போறாரா? இல்ல ஆடிட்டர் குருமூர்த்தி தான் இவரு கூட்டாளியா? பிளாக்லேபிளுக்குக் குறைஞ்சு "தீர்த்தம்" சாப்பிட முடியுமா நம்மால? நாம எதுக்கு சுதேசி அது இதுன்னு பெயர் வைச்சுக்கிட்டு!
சுதேசி படம் வெளிநாட்டுலேர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட கேமிராவுல, பிலிம் ரோல்ல படம் எடுக்கப்படும். மல்டிநேஷனல் தயாரிச்ச கார்ல எல்லாரும் வந்து நடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க..
பாரதிதான் சொன்னானே நடிப்புச் சுதேசிகள்னு..அதோட விட்டுட வேண்டியதுதானே..
இங்கிலீஷ்ல பேரு வைச்சா டாக்டரும் திருமாவும் கோபப்படுவாங்க..கடவுள் பெயருல ஏதாவது பண்ணினா சூலத்தைத் தூக்கிட்டு காவிப்படை ஓடி வந்துடும்..தேசபக்தி வியாபாரம்தான் இன்னும் நல்லா விலைபோகும்னு கேப்டன் நினைக்கிறாரு போல!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.